வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல் - 2018

வென்ற்வேத்வில் தமிழ்க்கல்விநிலையத்தின் 2018ம்ஆண்டுக்கான வருடாந்தப்பொதுக்கூட்டத்தை வருகின்ற மார்கழி மாதம் 15ம் திகதி சனிக்கிழமை (15-12-2018) அன்றுமாலை 4:00 மணிக்கு Campbell Street, Blacktown, NSW 2148 இல்அமைந்துள்ள Bowman Hall இல் பரிசளிப்புவிழாவின் போது நடாத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. அனைத்து அங்கத்தவர்களையும் தவறாது சமூகமளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்

 • தலைவர் உரை
 • சென்ற வருடாந்தப்பொதுக்கூட்ட அறிக்கை
 • அதிபர் உரை
 • பொருளாளர் அறிக்கை
 • 2019ம் ஆண்டுக்கான புதியசெயற் குழுதெரிவு
 • கணக்குப்பரிசோதகர் நியமனம்
 • புதிய தலைவர்உரை
 • கூட்ட முடிவு

2019ம் ஆண்டுக்கான புதியசெயற்குழுவில் பின்வரும் பதவிகளுக்கு நியமனங்கள்கோரப்படுகின்றன. விண்ணப்பமுடிவுதிகதி24-11-2018 (பி.ப 5:30 மணி) ஆகும்.

 • தலைவர்
 • உபதலைவர்கள் - இரண்டுபதவிகள்
 • செயலாளர்
 • உபசெயலாளர்கள் - இரண்டுபதவிகள்
 • பொருளாளர்
 • உபபொருளாளர்கள் - இரண்டுபதவிகள்
 • செயற்குழு உறுப்பினர்கள் 6 பதவிகள்

மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நியமனப்பத்திரத்தைப் பூர்த்திசெய்து 24-11-2018, பி.ப 5:30 மணிக்கு முன்னர் செயலாளரிடம் மட்டும் சமர்ப்பிக்கவும்.

பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் எமது கல்வி நிலையத்தின் வருடாந்த இராப்போசனவிருந்தில் நீங்கள் அனைவரும் கலந்துசிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

WTSC 2018_ Nomination Form for 2019 Executive Committee

WTSC 2019_Dinner_Confirmation_Form.