வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம்
WENTWORTHVILLE TAMIL STUDY CENTRE INC.
WENTWORTHVILLE TAMIL STUDY CENTRE INC.
வாழ்க வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் வாழிய வாழியவே
வாழ்க தமிழ் அன்னை ஆழிசூழ் உலகெலாம் வாழிய வாழியவே
செம்மை முறை வழி செந்தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்து வளர்த்திடுவோம்
எம்மையும் ஆதரித்தின் தமிழ் பயிற்றிடும் ஈடில்லா நிலையமிதே
ஈரமும் மானமும் வீரமும் போற்றுவம் இறைவனைத் தினந்துதிப்போம்
ஈகையில் வாய்மையில் அடக்கம் உயர் பண்பில் என்றுமே உயர்ந்திடுவோம்
அன்பைப் பொழிந்தென்றும் ஒற்றுமை பேணியே அருங்கலை கற்றிடுவோம்
இன்பத் தமிழ்ப் பள்ளி இனிது துலங்கிட எம்மையே அர்ப்பணிப்போம்
சங்கத் தமிழ் என்றும் மங்காப் புகழுடன் தரணியில் ஓங்கிடவே
எங்கும் தமிழ் மொழி எதிலும் தமிழ் மணம் எழிலுடன் வாழியவே!
–பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
We collaborate with community language organisations and providers.