2026 Term 1 Week 3 – Announcements

  அறிவித்தல்கள் Announcements

Date: Saturday 14/02/2026

📢 கடந்த வாரம் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லையா?
uEducateUs செயலியில் உங்கள் பிள்ளையின் வகுப்பு விபரங்களைச் சரிபார்த்து, மாணவரை உரிய வகுப்பறைக்கு அழைத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

📚 பாடப்புத்தகங்கள் வகுப்பறையிலேயே வழங்கப்படும்; எனவே, இது தொடர்பாக அலுவலகத்தை (Administration Office) நாட வேண்டிய அவசியமில்லை..

📢 MISSED LAST WEEK?
Check the uEducateUs app for your child’s class details and head straight to the right classroom.
📚 Books will be given out in class — no need to contact the administration office


மாணவர் ஒன்றுகூடல் / Assembly

மாணவர் ஒன்று கூடல் பி. ப. 3.00 தொடக்கம் பி. ப. 3.15 வரை இரண்டு வளாகங்களிலும் நாட்காட்டியில் காட்டிய நாட்களில் மாத்திரம் நடைபெறும். கீழே உள்ள இணைப்பை அழுத்தி பாடசாலை நாட்காட்டியைப் பார்க்கவும்.

The assembly will be held at both Campuses from 3.00pm to 3.15pm as per the school calendar. Please click the below link for the School Calendar.

பாடசாலை நாட்காட்டி / School Calendar


புதிய மாணவர் அனுமதிகள் | New Enrolments :

இரண்டு வளாகங்களிலும் (MRPS மற்றும் PHHS) மாணவர் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

MRPS Campus: பாலர் வகுப்பு முதல் ஆண்டு 4 வரையான மாணவர் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

PHHS Campus: ஆண்டு 5  முதல் ஆண்டு 12 வரையான மாணவர் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

மாணவர் பதிவுகளைச் சீராக மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு, பெற்றோர்கள் தமது பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate), மெடிகேர் அட்டை (Medicare Card) அல்லது பிள்ளையின் விபரங்களை உறுதிப்படுத்தக்கூடிய செல்லுபடியாகும் அவுஸ்திரேலியா ஆவணங்கள் (Valid Australian Documents) ஆகியவற்றின் பிரதிகளை எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

Enrolments will be accepted at both campuses (MRPS and PHHS). .

Parents are kindly advised to bring the child’s birth certificate, Medicare card, or any valid Australian document that shows their details to ensure a smooth enrolment.

MRPS Campus: Play school to Year 4 enrolments accepted.

PHHS Campus: Year 5 to Year 12 enrolments accepted.


மாணவர் கவனத்திற்கு : வகுப்பு ஆசிரியர் இன்றி மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி இல்லை

Attention Students: Students are not permitted to enter the classroom without a class teacher.


📢 CLASS TRANSFER NOTICE

வகுப்பு மாற்றங்கள்: மாணவர்களின் வகுப்பு நிலையை உயர்த்துவது அல்லது குறைப்பது (Year level up/down) தொடர்பான விண்ணப்பங்கள் இந்த வாரத்தில் இருந்து பரிசீலிக்கப்படும். இதற்கு அதிபரின் அனுமதி அவசியமாகும்.


⚠️ ஒரே தரத்திலுள்ள வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையிலான (Parallel class) மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


Class Transfers: Requests for year-level adjustments (moving up or down a grade) will be considered starting this week, with approval from the Principal.


⚠️ Please Note: Parallel class transfers (switching between different classes within the same year level) are not permitted.

.



Trophies and certificates:

2025-ஆம் ஆண்டிற்கான கேடயங்கள் (Trophies) மற்றும் சான்றிதழ்கள் எதிர்வரும் 4-வது மற்றும் 5-வது வாரங்களில் விநியோகிக்கப்படவுள்ளன. எனவே, பெற்றோர் அல்லது மாணவர்கள் எமது இரு வளாகங்களிலுமுள்ள நிர்வாக அலுவலகத்தில் (Administration Office) இவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதைத்  அறியத்தருகின்றோம்.

Please be advised that the 2025 trophies and certificates will be distributed during the upcoming weeks 4 and 5. Parents or students may collect them from the Administration Office at both of our campuses.


Teacher-Parent Meeting | ஆசிரியர்–பெற்றோர் சந்திப்பு


பாலர் பள்ளி முதல் ஆண்டு 10 (RoSA & HSC) வரையிலான மாணவர்களுக்கான (MRPS மற்றும் PHHS வளாகங்கள்) ஆசிரியர்–பெற்றோர் சந்திப்பு 4வது வாரத்தில், சனிக்கிழமை 21 பிப்ரவரி 2026 அன்று மதியம் 2:15 மணிக்கு தொடங்கும்.
நேர இடைவெளிகள் 3வது வாரத்திற்குப் பிறகு வெளியிடப்படும். முன்பதிவுகள் திறக்கப்பட்டவுடன் பெற்றோர்கள் தங்களுக்கு ஏற்ற நேரத்தை முன்பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சந்திப்பு உங்கள் பிள்ளையின் கற்றல் முன்னேற்றம், எதிர்கால இலக்குகள் மற்றும் அவர்களின் தமிழ் மொழித் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்கும்.
உங்கள் பிள்ளையின் கல்வியில் உங்கள் பங்கேற்பையும் தொடர்ந்த ஆதரவையும் எதிர்நோக்குகிறோம்.

Teacher–Parent meeting for Play school to year 10 (RoSA & HSC) (MRPS and PHHS Campus) will be held in Week 4, on Saturday 21 February 2026, starting from 2:15 pm 

Time slots will be released after Week 3. Parents are kindly requested to book a suitable time once bookings open.

This meeting will provide an opportunity to discuss your child’s learning goals and ways to further improve their Tamil language skills.

We look forward to your participation and continued support in your child’s education.


இக்கல்வியாண்டில் உங்கள் பிள்ளை தமிழ் பாடசாலைக்குத் தொடர்ந்து வருகை தர இயலாது எனின், அது குறித்த விபரங்களை  uEducateUs   செயலிக்கூடாக அறியத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

.
If your child will not be continuing at the Tamil school this academic year, please communicate us via uEducateUs app



MRPS Campus Car Parking: 

The front car park(via Metella road) is reserved for teachers only, while the rear  parking area (via Cornelia road) is designated for volunteers and subcommittee/committee members only. 

முன்புற   வாகனத்  தரிப்பிட பகுதி  (Metella road) ஆசிரியர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது, பின்பக்க  வாகனத்  தரிப்பிட பகுதி (Cornelia road) தொண்டர்கள்  மற்றும் உப குழு /செயற்குழு உறுப்பினர்களுக்கு  மட்டும்  ஒதுக்கப்பட்டுள்ளது.



PHHS Campus access  instructions | பாடசாலை நுழைவாயில்  : 

Students must enter the school premises only through the main gate of Pendle Hill High School, located at 66 Binalong Rd, Toongabbie.

Please note that due to Tamil School classes on Saturdays, the Parramatta Council has strictly prohibited parking on Binalong Road (directly in front of the school) between 1:00 PM and 5:00 PM.

The School Administration requests parents to park their vehicles in accordance with road traffic regulations.

மாணவர்களை 66 Binalong Rd, Toongabbie ல் அமைந்துள்ள பென்டில்கில் உயர்தர பாடசாலையின் பிரதான நுழைவாயிலின் வழியாக மட்டும் பாடசாலை வளாகத்திற்குள்  நுழைய முடியும். 

சனிக்கிழமைகளில் தமிழ்ப் பாடசாலை நடைபெறுவதால் பாடசாலைக்கு முன்பாக உள்ள Binalong Rdல் பிற்பகல் 1 மணி தொடக்கம் 5 மணிவரை வாகனங்கள்  தரிப்பது Parramatta மாநகரசபையால்  முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. 

வீதி விதிமுறைகளுக்கு அமைய உங்களது வாகனங்களை தரிக்குமாறு பெற்றோரை பாடசாலை நிவாகம் கேட்டுக் கொள்கிறது.


Stay Connected with Your Child’s School Information!

WTSC encourages parents to use the uEducateUs mobile app or online portal to stay updated on their child’s profile, class details, semester reports, and attendance. Additionally, school facilities fees can be conveniently paid through the uEducateUs app once you receive an invoice from WTSC.

We kindly ask parents to review and update their child’s details, including Name (in both English & Tamil) and Mainstream School Name & Year Level. This can be done through the uEducateUs online portal.

📌 Click here for the Parent Guide on using the uEducateUs Student Management System.


Classroom details

Classroom details check via  uEducate App (steps)

Step 1
Step 2
Step 3
Step 4