வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை முன்பள்ளி, ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களை 2010 ஆம் ஆண்டில்  உருவாக்கி முதலாவது பதிப்பு வெளியிடப்பட்ட து.  நியூ சவுத் வேல்ஸ் மாநில கல்வித் தராதர அதிகார சபை (NSW Education Standards Authority) 2019 ஆம் ஆண்டில் வெளியிட்ட தமிழ்ப் பாடத்திட்டத்தின் ஆரம்ப நிலைக்குரிய அடைவுகளுக்கு ஏற்ற வகையில் இப் புத்தகங்கள்  2021இல் மறுவெளியீடு செய்யப்பட்டது.

முன்பள்ளிப் புத்தகமானது கதைகள், சிறிய பாடல்கள் அவற்றுடன் தொடர்பான நிறங்கள், செயல்கள், உணர்ச்சிகள், உறவுகள், உடல் உறுப்புகள், மிருகங்கள், பறவைகள், அவற்றின் இயல்புகள், போன்றவற்றை உள்ளடக்கியதோடு இந்த சிறார்களின் வயதுக்கேற்ற உரையாடல்களுக்கான குறிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.  

முன்பள்ளிக்கான பயிற்சிப் புத்தகம் இளம் மாணவர்களின் தசை நார்ப் பயிற்சிக்கு வேண்டிய  பயிற்சிகளையும் தமிழ் எழுத்துகளை எழுதுவதற்குத் தேவையான கோடு, வளைவு போன்ற வரிவடிவங்களையும்  உள்ளடக்கியுள்ளது. 

ஆரம்பப் பள்ளிப் புத்தகம் ஒலிவடிவில் உயிர் எழுத்துகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறது.  அத்துடன் இலகுவான மெய் எழுத்துகளில் தொடங்கி முதல் வரி உயிர்மெய் எழுத்துகளை அடையாளம் காணவும் எழுதவும் மாணவர்கள் பழகுவார்கள்.  இறுதித் தவணையில் உயிர் எழுத்துகளை  எழுதப் பழகுவார்கள்.  மாணவர்கள் ஆங்கில எழுத்துகளை எழுதப் பழகும் முறையுடன் பொருந்தும் வகையில் இம்முறை அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின்  வயதிற்கேற்ப சிறிய கதைகள், பாடல்கள்  உரையாடல்களுக்கான குறிப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடப்பட்ட புத்தகங்களை வாங்கி பயன்பெற விரும்பின் தொடர்புகளுக்கு info@wtsc.org.au