2026 Term 1 Week 2 – Announcements

  அறிவித்தல்கள் Announcements

Date: Saturday 07/02/2026

📢 கடந்த வாரம் வரவில்லையா?
uEducateUs செயலியில் உங்கள் பிள்ளையின் வகுப்பு விபரங்களைச் சரிபார்த்து, சரியான வகுப்பறைக்கு அழைத்து வாருங்கள்.
📚 புத்தகங்கள் வகுப்பறையிலேயே வழங்கப்படும் — நிர்வாக அலுவலகத்தை அணுக வேண்டியதில்லை.

📢 MISSED LAST WEEK?
Check the uEducateUs app for your child’s class details and head straight to the right classroom.
📚 Books will be given out in class — no need to contact the administration office


மாணவர் ஒன்றுகூடல் / Assembly

மாணவர் ஒன்று கூடல் பி. ப. 3.00 தொடக்கம் பி. ப. 3.15 வரை இரண்டு வளாகங்களிலும் நாட்காட்டியில் காட்டிய நாட்களில் மாத்திரம் நடைபெறும். கீழே உள்ள இணைப்பை அழுத்தி பாடசாலை நாட்காட்டியைப் பார்க்கவும்.

The assembly will be held at both Campuses from 3.00pm to 3.15pm as per the school calendar. Please click the below link for the School Calendar.

பாடசாலை நாட்காட்டி / School Calendar


New Enrolments | புதிய மாணவர் அனுமதிகள் :

Enrolments will be accepted at both campuses (MRPS and PHHS). .

Parents are kindly advised to bring the child’s birth certificate, Medicare card, or any valid Australian document that shows their details to ensure a smooth enrolment.

MRPS Campus: Play school to Year 4 enrolments accepted.

PHHS Campus: Year 5 to Year 12 enrolments accepted.

இரண்டு வளாகங்களிலும் (MRPS மற்றும் PHHS) மாணவர் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

MRPS Campus: பாலர் வகுப்பு முதல் ஆண்டு 4 வரையான மாணவர் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

PHHS Campus: ஆண்டு 5  முதல் ஆண்டு 12 வரையான மாணவர் பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

மாணவர் பதிவுகள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய, பெற்றோர்கள் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate), மெடிகேர் கார்டு (Medicare card) அல்லது குழந்தையின் விவரங்களைக் காட்டும் ஏதேனும் செல்லுபடியாகும் ஆஸ்திரேலிய ஆவணங்களை (Valid Australian Document) எடுத்து வருமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


We kindly remind everyone about the proper use of school premises. Please do not bring food or drinks inside the classrooms and ensure that used cups, food wrappers, and any other waste are disposed of in the nearest bins provided. Your cooperation is greatly appreciated in keeping the school clean and tidy.

தயவுசெய்து வகுப்பறைகளுக்குள் உணவு அல்லது பானங்களை எடுத்து செல்ல வேண்டாம். பயன்படுத்திய பானக் குவளைகள் உணவு உறைகள் மற்றும் பிற குப்பைகளை அருகிலுள்ள குப்பைத் தொட்டிகளில் போடுவதை உறுதி செய்யுங்கள்.


📢 CLASS TRANSFER NOTICE | Trophies and certificates:

Class transfers (year level up or down) will be processed from Week 3, subject to Principal approval.
⚠️ Please note: Parallel class transfers (same year level within divisions) will not be accepted.

Trophies and certificates will not be available for collection until Week 3 due to the workload associated with the school opening.

வகுப்பு மாற்றங்கள் (ஆண்டு நிலை உயர்வு அல்லது குறைவு) 3வது வாரத்திலிருந்து அதிபர் அனுமதிக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும்.


⚠️ குறிப்பு: வகுப்பு மாற்றங்கள் ஒரே ஆண்டு நிலையில் பிரிவுகளுக்கு இடையே ஏற்றுக்கொள்ளப்படாது.


புதிய வருட பாடசாலை ஆரம்பம்  தொடர்பான பணிகளில் செயற்குழுவினர் ஈடுபட வேண்டியிருப்பதால்   3 ஆம் வாரம் வரை கடந்த வருட விருதுகள், பதக்கங்கள்  சான்றிதழ்கள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


எமது பாடசாலையின் வளர்ச்சி மற்றும் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ள பிரதான பாடசாலை (Main School) விதிமுறைகள் காரணமாக, ஒவ்வொரு வாரமும் பாடசாலை நடவடிக்கைகளைச் சீராக நிர்வகிப்பது பெரும் சவாலாக உள்ளது.

எமது பாடசாலைச் செயற்பாடுகளுக்கு உதவுவதற்கும், தமிழைப் பேணிப் பாதுகாக்கவும் தன்னார்வத் தொண்டு ஆசிரியர்களாகவோ (Volunteer Teachers), அல்லது அர்ப்பணிப்புள்ள நிர்வாகத் தொண்டர்களாகவோ (Operations Volunteers) இணைந்து கொள்ளுமாறு பெற்றோர்களை வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

எமது செயற்பாடுகளைத் தடையின்றிச் சீராக முன்னெடுப்பதற்கு உங்கள் உதவி மிகவும் அவசியமானது. நீங்களும் உதவ விரும்பினால், தயவுசெய்து கீழுள்ள இணைப்பை (Link) அழுத்தி உங்கள் விருப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்

Due to the growth of our school and stricter Public School regulations, managing weekly operations smoothly has become a significant challenge.

We humbly request parents to join us as Volunteer Teachers or dedicated Operations Volunteers to assist with school activities and help preserve the Tamil language.

Your support is essential to ensure our operations continue smoothly and without interruption. If you are interested in helping, please click the link below to register your interest


MRPS Campus Car Parking: 

The front car park(via Metella road) is reserved for teachers only, while the rear  parking area (via Cornelia road) is designated for volunteers and subcommittee/committee members only. 

முன்புற   வாகனத்  தரிப்பிட பகுதி  (Metella road) ஆசிரியர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது, பின்பக்க  வாகனத்  தரிப்பிட பகுதி (Cornelia road) தொண்டர்கள்  மற்றும் உப குழு /செயற்குழு உறுப்பினர்களுக்கு  மட்டும்  ஒதுக்கப்பட்டுள்ளது.


PHHS Campus access  instructions | பாடசாலை நுழைவாயில்  : 

Students must enter the school premises only through the main gate of Pendle Hill High School, located at 66 Binalong Rd, Toongabbie.

Please note that due to Tamil School classes on Saturdays, the Parramatta Council has strictly prohibited parking on Binalong Road (directly in front of the school) between 1:00 PM and 5:00 PM.

The School Administration requests parents to park their vehicles in accordance with road traffic regulations.

மாணவர்களை 66 Binalong Rd, Toongabbie ல் அமைந்துள்ள பென்டில்கில் உயர்தர பாடசாலையின் பிரதான நுழைவாயிலின் வழியாக மட்டும் பாடசாலை வளாகத்திற்குள்  நுழைய முடியும். 

சனிக்கிழமைகளில் தமிழ்ப் பாடசாலை நடைபெறுவதால் பாடசாலைக்கு முன்பாக உள்ள Binalong Rdல் பிற்பகல் 1 மணி தொடக்கம் 5 மணிவரை வாகனங்கள்  தரிப்பது Parramatta மாநகரசபையால்  முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. 

வீதி விதிமுறைகளுக்கு அமைய உங்களது வாகனங்களை தரிக்குமாறு பெற்றோரை பாடசாலை நிவாகம் கேட்டுக் கொள்கிறது.


Stay Connected with Your Child’s School Information!

WTSC encourages parents to use the uEducateUs mobile app or online portal to stay updated on their child’s profile, class details, semester reports, and attendance. Additionally, school facilities fees can be conveniently paid through the uEducateUs app once you receive an invoice from WTSC.

We kindly ask parents to review and update their child’s details, including Name (in both English & Tamil) and Mainstream School Name & Year Level. This can be done through the uEducateUs online portal.

📌 Click here for the Parent Guide on using the uEducateUs Student Management System.


Classroom details

Classroom details check via  uEducate App (steps)

Step 1
Step 2
Step 3
Step 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *