கலைவிழா மலருக்கான மாணவர் ஆக்கங்கள்
எதிர் வரும் வருடாந்த கலைவிழாவை முன்னிட்டு, கலைவிழா 2025 மலருக்கான மாணவர்களுடைய ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. கீழ் வகுப்பு (Play School – Year 6) மாணவர்களுடைய ஆக்கங்கள் அரைப் பக்கத்திலும் மேல் வகுப்பு (Year 7 -Year 12) மாணவர்களுடைய ஆக்கங்கள் முழுப் பக்கத்திலும் உள்ளடக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கலைவிழா மலருக்கான ஆக்கங்கள் சம்பந்தமாக பின்வரும் குறிப்புகளை பின்பற்றவும்:
- மாணவர்கள் தங்களுடைய ஆக்கங்களை தவணை 3, வாரம் 3, சனிக்கிழமை 9-08-2025 க்கு முன்னதாக, பாடசாலை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
- தாமதமாக வரும் ஆக்கங்கள் பிரசுரிக்க படமாட்டாது
- ஆக்கங்கள் பல வண்ண நிறத்தில் இருப்பது நல்லது
- தெளிவான ஆக்கங்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும்
- மாணவர்கள் தங்கள் பெயரையும் வகுப்பையும் தெளிவாக உள்ளடக்கவும்
- செயற்கை நுண்ணறிவு மூலம் படைக்கப்படும் எந்த ஆக்கமும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
- கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் மாத்திரம் பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும்
- மாணவர்கள் படத்தை மட்டும் வரையாது அதைப் பற்றி தமிழில் ஒரு சொல்லேனும் எழுத தூண்டுதல் விரும்பத்தக்கது
ஆக்கங்களை தயாரிப்பதற்கான படிவத்தை கீழே உள்ள இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
Drawings and articles for Kalaivizha Magazine
It’s time to get creative with your Kalaivizha Magazine drawing or article! We request students to get your drawings or article submissions ready for this year’s Annual Kalaivizha Magazine. Lower school (Play School – Year 6) students are asked to use the half page template. Upper school (Year 7 -Year 12) students are eligible to use the full page template.
Please note the below regarding your submissions:
- Student drawings or articles need to be submitted by Term 3, Week 3, Saturday 09-08-2025 to the School Admin desks, at the respective campuses.
- Submission received after this deadline will not be published in the magazine.
- We encourage drawings to be vivid and colourful.
- Only submissions that are clear in presentation, content, and legibility will be published in the magazine.
- Students are requested to clearly write their name and class in their article or drawing.
- Images and works drawn using artificial intelligence (AI) will not be accepted.
- Only submissions created by hand, either drawn or written will be accepted for publication.
- Students are encouraged to write a few words in Tamil about their picture.
Use the links below to access the templates.