
விசேட அறிவித்தல்| Special Announcement
Date: 26-Jul-2025
MRPS Campus: Metella Road Public School, 117-131 Metella Road, Toongabbie NSW 2146

MRPS வளாக போக்குவரத்து மற்றும் வாகன தரிப்பிட ஒழுங்குகள்
🚗 ஆசிரியர்களுக்கான வாகன தரிப்பிடம் – Metella Road
- இந்த வாகனத் தரிப்பிடம் ஆசிரியர்களுக்கு மட்டும் உரிதானது
- பெற்றோர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த தரிப்பிடத்தினை பாவிப்பதை தவிர்த்துக் கொள்ளவும்
- பாடசாலை வாயிலை அடைத்து உங்கள் வாகனங்களை நிறுத்துவதை தவிர்த்துக்கொள்ளவும், இது விபத்துக்களுக்கான சாத்தியத்தினை அதிகரிக்கிறது
🚙 தொண்டர்களுக்கான தரிப்பிடம் – Cornelia Road
- இந்த தரிப்பிடம் தொண்டர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது
- பெற்றோர்கள் இந்த தரிப்பிடத்தினை பாவிப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.
- பாதுகாப்பு காரணங்களுக்காக பாடசாலை ஆரம்பத்தில் அல்லது முடிவில் பிள்ளைகளை ஏற்ற இறக்க பாவிப்பதை கூட முற்றாக தவிர்க்கவும்
- ஒரு சில பெற்றோர் பாவிப்பது தற்போது அவதானிக்கப்பட்டுள்ளது, அதை தவிர்க்குமாறு உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்
🎟 தரிப்பிட அனுமதிப்பத்திரங்கள்
- அனைத்து ஆசிரியர்களுக்கும், நிரந்தர தொண்டர்களுக்கும் இந்த பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது
- இந்த பத்திரங்களை , வாகனங்களில் காட்சிப்படுத்தும் வாகனங்கள் மாத்திரமே இந்த இடங்களில் தரிக்க அனுமதிக்கப்படுவார்கள்
- வாகனத்தின் முன்னால் இந்தப் பத்திரங்களை காட்சிப்படுத்தவும்
MRPS Campus Traffic and Parking Regulations
🚗 Teachers’ Parking – Metella Road
- Strictly for WTSC MRPS teachers only.
- No parents or volunteers are permitted to use this area for parking at any time.
- Please do not park in front of the entrance gate – this area must remain clear at all times.
🚙 Volunteer Parking – Cornelia Road
- Reserved only for WTSC volunteers.
- Parents are not permitted to park here under any circumstances, including for pick-up or drop-off. This applies even after class has ended.
- We’ve observed a small number of parents continuing to use this parking. We respectfully ask that this practice stops immediately.
🎟 Parking Permits Required
- All teachers and regular volunteers will be issued parking permits.
- Only vehicles displaying a valid permit will be allowed to park in the designated areas.
- Please display your permit clearly on your dashboard while parked.
MRPS வளாக குளிர்பானம், தேநீர் மற்றும் பிஸ்கட் நடைமுறைகள்
எமது அனைத்து வளாகங்களிலும், குறிப்பாக MRPS வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் கடதாசிக் குவளைகள் சம்பந்தமான புகார்கள் , அதிபரால் தொடர்ந்து எழுப்பபட்டிருந்ததோடு , இவை சம்பந்தமாக நாங்கள் அடிக்கடி உங்களுக்கு ஒன்றுகூடல் மற்றும் சந்திப்புகளில் அறியத்தந்துமிருந்தோம்.
தவணை மூன்றிலிருந்து சில கழிவகற்றல் மற்றும் வகுப்பறை பாவனை நிபந்தனைகளோடு தான் இந்த பாடசாலையின் ஒப்பந்தத்தினை புதுப்பித்ததுடன், மேலதிக வகுப்பறைகளையும் தந்து உதவியுள்ளார் .
பாடசாலையினை நீண்ட காலத்திற்கு, இந்த வளாகத்தில் இயங்க வைக்கும் நோக்கத்தில், பின்வரும் நடைமுறைகள் தவணை மூன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்பட எண்ணியுள்ளோம் , இதனை நடைமுறைப்படுத்தவதில் உங்கள் அனைவரது முழு ஆதரவினையும் வேண்டி நிற்கிறோம்.
- வரும் வாரங்களில் இடைவேளையின் போது மாணவர்களுக்கு குளிர்பானம்(cordial) மற்றும் பிஸ்கட் ஒரு குறித்த இடத்தில் வழங்கப்பட்டு மாணவர்கள் அங்கேயே அதனை பருகி , பக்கத்திலுள்ள குப்பை தொட்டிகளில் சேர்க்கும் படி அறிவுறுத்தப் படுவார்கள். உங்கள் பிள்ளைகளுடன் குப்பைகளை உரிய இடத்தில் சேர்ப்பது பற்றியும் பாடசாலையில் அவர்களது கடமைகள் பற்றியும் உரையாடவும்
- இந்த நடவடிக்கை வரும் நான்கு வாரங்களுக்கு தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு, தொடர்ந்தும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் நடவடிக்கைகள் பயனளிக்காத பட்சத்தில் , வருங்காலத்தில் இவற்றினை வழங்குவதனை இடை நிறுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்
- பெரும்பாலான புகார்கள் பெற்றோர்களின் தேநீர் குவளைகள் சம்பந்தமாக வருவதால், பெற்றோர்களுக்கு தேநீர் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது
- பெற்றோர்கள், பாடசாலை நேரத்தில் மற்றும் பாடசாலை முடிந்தவுடன் தேவையற்ற விதத்தில், பாடசாலை வளாகத்தில் தங்கி நிற்பது, பாடசாலையின் வளங்களை தேவையற்ற விதத்தில் பாவிப்பது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து கொள்ளவும். பிரதான பாடசாலைகளில், பாடசாலை நேரத்தில் என்ன விதமான ஒழுங்கு கடைபிடிக்கப்படுமோ, அதனை இங்கும் பின்பற்றவும்
உங்கள் ஒத்துழைப்பின் மூலம் பாடசாலை நேரத்தை வினைத்திறனாக பாவிக்க, நிர்வாகத்திற்கு உதவுமாறு வினயமாக கேட்டுக் கொள்கிறோம்
MRPS Campus Drink, Tea and Biscuit Update
We had numerous complaints about students and parents discarding plastic and paper cups across all our campuses. At MRPS this has been an ongoing issue. The Principal has repeatedly raised this issue, and we have regularly informed parents about it during meetings and gatherings, without little improvement.
To ensure the smooth running of the school on this campus for the long term, we are introducing the following procedures from Term 3, and we kindly ask for your full support in implementing them to ensure Tamil schools continued use at MRPS.
- Student Break Times: During breaks, students will be provided with cordial and biscuits at a designated area. They will be instructed to drink the cordial and dispose of their rubbish in the bins nearby. Please have a conversation with your children about the importance of keeping the school grounds clean and their responsibility in this effort.
- Monitoring and Evaluation: This initiative will be closely monitored over the next four weeks. If there is no noticeable improvement in the behavior of both students and parents, further actions—including discontinuing the provision of these items—will be considered.
- Temporary Pause on Tea for Parents: Due to most of the complaints about discarded tea cups, the provision of tea for parents will be temporarily paused. We kindly ask for your understanding and support.
- School Grounds Usage: Once classes are dismissed, we request that parents and children leave the school grounds promptly and refrain from using the playgrounds and equipment. Additionally, we encourage everyone to observe similar discipline during school time.
நிர்வாகக் குழு | Administration
வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் | Wentworthville Tamil Study Centre.
END