பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் கடமைகள்
- பிள்ளைகளைத் தவறாது பாடசாலைக்கு அனுப்பி வையுங்கள். இது மாணவர்களின் தொடர்ச்சியான அறிவு வளர்ச்சிக்கும் பாடசாலையை ஒரு கட்டமைப்போடு நடாத்துவதற்கும் அவசியமானதொன்று.
- மிக இலகுவான முறையிலும் பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் பிள்ளைகளுடன் தமிழில் உரையாடுங்கள். இது பிள்ளைகளின் மொழிப்பற்றை வளர்ப்பதற்கு உதவுவதுடன் அவர்கள் தமிழ் மொழியை பயில்வதையும் இலகுவாக்கும்.
- அன்றாட தமிழ் பாடசாலை நிகழ்வுகளை பிள்ளைகளிடமிருந்து அறிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் கவனிப்பையும் தமிழ் மொழியில் உள்ள அக்கறையையும் எடுத்துக்காட்டுவதுடன் பிள்ளைகளை அடுத்த வகுப்பிற்கு தயார் படுத்தவும் (வகுப்பு வேலைகள், நிகழ்ச்சிக்கான பயிற்சிகள்) உதவும்.
- பாடசாலை முடிவடைய 10 நிமிடம் முன்னதாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் பாலர்பள்ளி, ஆரம்ப பள்ளி மற்றும் முன்பள்ளி மாணவர்களை ஆசிரியர்களிடமிருந்து பொறுப்பேற்று செல்ல வேண்டும்.
- மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு அவர்களை பாடசாலை வளாகத்தினுள் அழைத்து வந்து விட்டுச் செல்லுங்கள்.
- பாடசாலை நிர்வாகத்தின் அனுமதி இன்றி பாடசாலை வேளையில் மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது. மாணவர்கள் 15 நிமிடத்திற்கு மேல் தாமதமாக பாடசாலைக்கு வந்தால் நிர்வாகத்தினரின் அனுமதியைப் பெற்ற பின்னரே வகுப்பறைக்குச் செல்ல வேண்டும்.
- கலை விழாவில் உங்கள் பிள்ளை பங்குபற்றுமிடத்து பயிற்சிகளுக்குத் தவறாது உரிய நேரத்திற்குப் பிள்ளையை அழைத்து வாருங்கள்.
- பாடசாலைச் சுற்றாடலில் வாகனங்களை வீதி நெறி முறைகளுக்கமைய நிறுத்தி வைப்பதோடு உங்கள் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும் முடிவடையும் நேரத்திலும் வாகனப் போக்கு வரத்து அதிகமாக இருப்பதனால் இந்த நேரங்களில் கூடிய கவனம் செலுத்தவும்.
- ஒவ்வொரு பெற்றோரும் தாமாக முன்வந்து செயற்குழு, உபகுழுக்கள் மற்றும் தொண்டர் குழுக்களில் பங்கெடுங்கள், ஒத்துழையுங்கள், கருத்துத் தெரிவியுங்கள், உதவுங்கள். இதனால் பெற்றோருக்குத் தமிழ் பாடசாலையிலுள்ள அக்கறை கண்டு மாணவர்கள் உற்சாகமடைவார்கள்.
- பெற்றோர்களின் தொடர்பு இலக்கங்கள், முகவரி அல்லது மாணவர்களது பிரதான பாடசாலை போன்ற தகவல்களில் மாற்றங்கள் ஏற்பட்டால் அதனை உடனடியாக uEducateUs தளத்தில் பதிவு செய்யவேண்டும். உங்களுடைய தகவல்களை நீங்களே பதிவு செய்யக்கூடிய வசதி இந்த தளத்தில் உள்ளது.