பாடசாலையில் மாணவர்களின் கடமைகள்

  • பாடசாலைக்குத் தவறாது சமுகமளிப்பதுடன் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்னதாக வகுப்பறைக்கு வருகை தரல்  வேண்டும்.
  • ஆசிரியர் வகுப்பறைக்குள் சென்ற பின்னரே மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ல வேண்டும்.
  • வகுப்பாசிரியர் கேட்டுக்கொண்டால் அன்றி வகுப்பு ஒழுங்கை மாற்றி அமைக்கக் கூடாது. அவ்வாறு வகுப்பு ஒழுங்கை மாற்றி அமைக்கும் பட்சத்தில் பாடசாலை முடிவடையும் போது ஆரம்பத்தில் இருந்தவாறு வகுப்பு ஒழுங்கை மீள  அமைப்பதற்கு உதவ வேண்டும்.
  • வகுப்பறை பொருட்களைச் சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. வகுப்பறை உடைமைகளைச் சேதப்படுத்தக் கூடாது.
  • வகுப்பறையில் அமைதியாக இருந்து ஏனைய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல்   நடந்து கொள்ள வேண்டும்.
  • வீட்டு வேலைகள் தரப்பட்டிருந்தால் அவற்றை பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் பூர்த்தி செய்து கொண்டு வருதல் வேண்டும்.
  • வகுப்பாசிரியர் அனுமதியின்றி இடைவேளை தவிர்ந்த நேரங்களில் வகுப்பறையை விட்டு வெளியேறக் கூடாது.
  • இடைவேளையின் போது பாடசாலை வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது, மற்றும் ஆசிரியர்கள் இல்லாமல் வகுப்பறைக்குள் செல்லக் கூடாது. 
  • இடைவேளையின் போது வரிசைக்கிரமமாக நின்று குளிர்பானம் பெற்றுக் கொள்ள வேண்டும்.  குளிர்பானங்களை அருந்திய பின்னர் ‘பிளாஸ்ரிக்’ குவளைகளை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் போட வேண்டும்.
  • பாடசாலை முடிவடைந்த பின்னர் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இன்றி பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறக் கூடாது.