
வருடாந்த புகைப்பட நாட்கள்: 08-08-2026 (PHHS) மற்றும் 15-08-2026 (MRPS)
வருடாந்த கலைவிழா மலருக்கான புகைப்படங்கள் இவ்வருடம் இரண்டு தினங்களில், ஒவ்வொரு வளாகத்திலும் தனித்தனியாக, பாடசாலை நேரத்தில் எடுக்கப்படும்.
| வளாகம் | திகதி |
|---|---|
| PHHS | 08-08-2026 |
| MRPS | 15-08-2026 |
மாணவர்கள் தத்தமது வளாகத்திலேயே புகைப்படம் எடுப்பார்கள்.
அனைத்து வகுப்புக்களும் வழமையான இடத்திலும் வழமையான நேரத்திலும் நடைபெறும்.
பெற்றோர்கள், வழமையாக பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில், பிள்ளைகள் வகுப்பில் சமூகம் அளிப்பதை உறுதிப்படுத்தவும். தாமதமாக வரும் மாணவர்கள் புகைப்படத்தில் இடம்பெறமுடியாமல் போகலாம்.
மாணவர்கள் தமிழ்க் கலாசார உடையில் வருதல் வேண்டும். மாதிரிப் புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் படப்பிடிப்பு இடத்தில் மாணவர்களைப் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஆட்சேபனைகள்
புகைப்பட மற்றும் வீடியோ அனுமதி: வருடாந்த புகைப்படம் எடுப்பதிலோ, கலைவிழா மற்றும் பாடசாலை நிகழ்வுகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதிலோ ஆட்சேபனை இருப்பின், உங்கள் பிள்ளையின் வளாகத்திற்குரிய புகைப்பட தினத்திற்கு முன்னராக (PHHS — 07-08-2026; MRPS — 14-08-2026) info@wtsc.org.au என்கிற மின்னஞ்சலூடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
Annual Photo Days: 08-08-2026 (PHHS) and 15-08-2026 (MRPS)
Photo shoots for the Kalai Vizha magazine will take place this year over two separate days, one at each campus, during school hours.
| Campus | Date |
|---|---|
| PHHS | 08-08-2026 |
| MRPS | 15-08-2026 |
Students will be photographed at their own campus.
All classes will operate as per the usual location and schedule.
Parents are requested to ensure students arrive to class promptly at the usual starting time. Students arriving late to class may miss the photo opportunity.
Students are kindly requested to wear Tamil cultural attire for the photo shoot. Sample attire photos are attached below.
Please note that parents are not allowed to take photographs of students during the photo shoot.
Objections
Photo and Video Permission: If you have any objections to the annual photo shoot, or to photos and videos of your child being taken at Kalai Vizha and school events, please contact info@wtsc.org.au before your child’s campus photo day (PHHS — 07-08-2026; MRPS — 14-08-2026).
Thank you.
மாதிரிப் புகைப்படம் / Sample Photo

