Special Announcement |Term 3| PHHS

Date: 26-Jul-2025

PHHS Campus: Pendle Hill High School, 66 Binalong Rd, Toongabbie NSW 2146


PHHS வளாக போக்குவரத்து மற்றும் வாகன தரிப்பிட ஒழுங்குகள் 

புதிய பாடசாலை  மற்றும் அயலவருடன்  எமது தமிழ் கல்வி நிலையத்தின் உறவும்  பயன்பாடும்  நீண்டகாலம் சிறப்புற அமைய, உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பினை வேண்டி நிற்கிறோம். 

  • மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  Binalong Rd, வீதி வழியாக மாத்திரமே பாடசாலைக்குள் உள்  நுழைய முடியும். 
  • எக்காரணம் கொண்டும் வேறு நுழைவாயில்களை பாவிக்க வேண்டாம் 
  • பாடசாலையில் பிள்ளைகளை உங்கள் வாகனத்திலிருந்து , Binalong  வீதியில் உள்ள பாதுகாப்பான மாணவர் இறங்கும் வலயங்களில் (KISS and DROP ) இறக்கி விடவும் 
  • Binalong  வீதியில் உள்ள KISS and DROP வலயத்தில் வாகனங்களை தரிப்பதை , பாடசாலை நன்மை கருதி தவிர்க்கவும்.

PHHS Campus Traffic and Parking Regulations 

To ensure a safe and smooth experience for everyone, please carefully follow the PHHS Campus Traffic and Parking Regulations:

  • All entry to the school must be via Binalong Road.
  • Do not use any other entrances for any reason.
  • Use the designated “KISS AND DROP ” zones on Binalong Road for drop-off and pick-up .
  • These areas are designed for student safety.
  • No parking on the kiss and drop zone in Binalong Road.

We appreciate your understanding and cooperation in following these rules, which help us maintain a safe and respectful environment for our students, families, and the local community.


PHHS வளாக குளிர்பானம் மற்றும் பிஸ்கட் நடைமுறைகள் 

எமது அனைத்து வளாகங்களிலும், மாணவர்கள்  மற்றும் பெற்றோர்களால் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் கடதாசி குவளைகள்  சம்பந்தமான புகார்கள் , அதிபர்களால்  தொடர்ந்து எழுப்பபட்டிருந்ததோடு , இவை  சம்பந்தமாக நாங்கள் அடிக்கடி உங்களுக்கு ஒன்றுகூடல் மற்றும் சந்திப்புகளில் அறியத்தந்திருந்தோம். 

PHHS அதிபரும் இது பற்றி மிகுந்த கரிசனை கொண்டிருப்பதோடு , தற்போதைக்கு சில கழிவகற்றல் நிபந்தனைகளோடு தான்  இந்த பாடசாலையினை எங்களுக்கு தந்துள்ளார். 

இதன் காரணமாக பின்வரும் நடைமுறைகள் தவணை மூன்றில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன, இதனை நடைமுறைப்படுத்த உங்கள் அனைவரது ஆதரவினையும் வேண்டி நிற்கிறோம்.

  1. இடைவேளையின் போது மாணவர்களுக்கு குளிர்பானம்(cordial) வழங்கப்பட மாட்டாது
  2. இடைவேளையின் போது மாணவர்களுக்கு வழமை போல பிஸ்கட் வழங்கப்படும் 
  3. மாணவர்களுக்கு தேவையான குடிநீரினை, நீங்கள் வழமையாக பிரதான பாடசாலைக்கு  கொடுத்து விடுவது போல கொடுத்து விடவும் 
  4. தேவையான அளவு குடிநீர் குழாய்கள் பாடசாலை வளாகத்தில் உள்ளன அவற்றையும் மாணவர்கள் இடைவேளையின் போது பாவிக்கலாம் 

உங்கள் பிள்ளைகளுடன்  குப்பைகளை உரிய இடத்தில் சேர்ப்பது பற்றியும் பாடசாலையில் அவர்களது கடமைகள் பற்றியும்  உரையாடவும் 

PHHS  Campus Drink and Biscuit Procedures

Across our campuses, there have been repeated concerns from school principals about litter—particularly plastic and paper cups—being left around school grounds. This issue has been raised at several of our assemblies and meetings. The PHHS Principal has expressed serious concern and, as a result, has requested that we implement stricter waste management procedures during our sessions.

Starting from this week, the following procedures will apply:

  1. No cold drinks (cordial) will be provided to students during recess.
  2. Students will continue to receive biscuits as usual.
  3. Please ensure your child brings their own drinking water from home, as you have always done.
  4. Water bubblers and taps are available on the school grounds and may be used during recess, just as in regular school settings.

Please speak with your children about using bins responsibly and disposing of any wrappers or rubbish properly.

Your cooperation is essential in helping us maintain a respectful and clean relationship with our host school. We appreciate your continued support in reinforcing these messages with your children.



நிர்வாகக் குழு | Administration

வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் | Wentworthville Tamil Study Centre.


END