Term 3 | Week 4 | Weekly Announcements

PHHS Campus: Pendle Hill High School, 66 Binalong Rd, Toongabbie NSW 2146

MRPS Campus: Metella Road Public School, 117-131 Metella Road, Toongabbie NSW 2146

Term 3 Week 04: Saturday 16-Aug-2025

கலைவிழா அறிவித்தல்கள் | Kalaivizha Announcements  | 2025


Location: Toongabbie Community Centre

பெரும்பாலான வகுப்புகள், மேலதிக பயிற்சிகளை கலைவிழா நாள் வரை  TCC – Toongabbie Community Centre இல் ஒழுங்குபடுத்தியுள்ளார்கள். உங்களுடைய  வகுப்புக்குரிய  நேரம் – திகதி  சம்பந்தமாக ஆசிரியர்கள் உங்களுக்கு அறியத்தருவார்கள்.


ஏனைய அறிவித்தல்கள் | Other announcements


PHHS வளாக வாகன நெரிசல்

கடந்த சில வாரங்களாக, PHHS வளாகத்தில் பாடசாலை முடியும் நேரத்தில் ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக  பெற்றோர்கள் விசனமடைவதோடு, WTSC நிர்வாகத்தினர் மாணவர்கள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலையடைந்துள்ளோம்.

 WTSC நிர்வாகம் இது சம்பந்தமாக எமது பாதுகாப்பு உபகுழு மற்றும் போக்குவரத்து ஆலோசகர்களின் கருத்துகளை கேட்டு, இந்த வாரத்திலிருந்து சில நடைமுறைகளை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளோம். இதனை சாத்தியப்படுத்தவதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு முக்கியமானது.

வாகனங்கள் தரித்தல்: பாடசாலை முடிவடையும் நேரத்தில் தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்களுக்கு  மேலாக பாடசாலை முன்றலில் வாகனங்களில் தரித்து நிற்பதை தவிர்க்கவும். இவர்களால், அவர்களுக்கு பின்னாலுள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளை வாகனங்களில் ஏற்ற முடியாது போகிறது. தயவு செய்து மற்றைய பெற்றோரையும் கருத்தில் கொண்டு , நெடு நேரம் தரித்து நிற்பதையோ, வாகனத்தை முற்றாக நிறுத்தி வைப்பதையோ  தவிர்க்கவும்.

வகுப்பு முடியும் நேரம் மாற்றம்: PHHS வளாக வகுப்புகள் ஐந்து  தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியும் 15 நிமிட இடைவெளியில் வகுப்புகள் முடிவடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வகுப்பு முடியும் நேரத்தை அறிய இந்த வார நேர அட்டவணையை கவனமாக பார்க்கவும். கலைவிழா ஒத்திகைகள் காரணமாக இந்த நேரங்கள் சில வேளைகளில் மாற்றப்படலாம், ஆசிரியர்கள் இது சம்பந்தமாக உங்களுக்கு அறியத்  தருவார்கள்.

அயலிலுள்ள வீதிகள் பாவனை : PHHS வளாகத்திற்கு அருகில் உள்ள Burrabogee Road , Ford Street மற்றும் Binnalong வீதியின் மறுபக்கம் ஆகியவற்றில் வாகனத்தை நிறுத்தி விட்டு பாடசாலை முன்றலுக்கு நடந்து வரலாம், 3-5 நிமிட நடை போதுமானது. அருகிலேயே பாதுகாப்பான வீதிக்கடவைகளும் உண்டு.

வீதி ஒழுங்குகள்: பாடசாலைக்கு முன்புள்ள Binnalong வீதி , சனிக்கிழமைகளிலும் பாடசாலை நாளாக கருதுவதற்கான வீதி ஒழுங்குகளை(Street sign) செய்வதற்கான கோரிக்கை Parramatta Council இடம் வைக்கப்பட்டுள்ளது. இப்படியான ஒழுங்கு GPS வளாகத்தில் இருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

PHHS Campus Traffic Jam

For the past few weeks, parents have been frustrated by the traffic jams that occur on the PHHS campus during school hours, and the WTSC administration is also concerned about the safety of students and volunteers.

The WTSC administration has listened to the feedback  of our safety subcommittee and traffic consultants in this regard and has decided to introduce some procedures starting this week. The cooperation of parents is important to make this possible.

Parking in front of School: Please avoid parking in front of the school for more than two  minutes . If you stay longer, that  will prevent parents behind you from picking up their children. Please be considerate of other parents and avoid parking or standing in front of the school for long periods of time.

Class End Time Change: PHHS Campus classes are divided into five  blocks, and each block is scheduled to end 15 minutes apart. Please check this week’s timetable carefully to find out your class end time. These times may sometimes change due to Kalaiviza  rehearsals, and the teachers will inform you accordingly.

Neighbouring Roads: You can park your car on Burrabogee Road, Ford Street and the other side of Binnalong Road near the PHHS campus and walk to the front of the school, a 3-5 minute walk is sufficient. There are also safe crosswalks nearby.

Street Regulations: A request has been made to Parramatta Council to make street signs to consider Binnalong Road in front of the school as a school day on Saturdays. Please note we had a similar arrangement at GPS Campus.


தவணை மூன்று | புதிய மாணவர் அனுமதிகள் மற்றும் வகுப்பு இடமாற்றங்கள் | இடைநிறுத்தப்பட்டுள்ளது

  • தவணை மூன்றில் வகுப்பு இடமாற்றங்கள் மற்றும் மாணவர் அனுமதிகள் முற்றாக இடை நிறுத்தப்பட்டுள்ளது
  • கலை விழா தயாரிப்பு காலத்தில், புதிய அனுமதிகளால்  ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் ஏற்கனவே அறிவித்த படியும் இந்த ஒழுங்கு கடைப்பிடிக்கப்படும்.
  • HSC வகுப்புகளுக்குரிய அனுமதிகள் மாத்திரம் அதிபரின் அறிவுறுத்தலுக்கமைவாக இடம்பெறும்

Term 3 | New admissions  and class Transfers | ON HOLD

  • Please be aware that class transfers and new admissions will be completely suspended during Term 3.
  • This decision has been made to ensure that teachers can focus on their preparations for the upcoming Kalai Vila event without any additional disruptions.
  • HSC Admissions: Admissions for HSC classes will continue, but will be processed in line with the Principal’s instructions

கலாநிதி வேந்தனார் இளங்கோ ஞாபகார்த்த தமிழ்ப்  புலமைப் பரீட்சை – 2025

திகதி: சனிக்கிழமை, 23ந் ஆகஸ்ட் 2025

இந்த பரீட்சை, மாணவர்களின் தமிழ் மொழிப் புலமை மற்றும் கலாச்சாரப் புரிதலை ஊக்குவிக்கும் முக்கியமான வாய்ப்பாகும். இந்த பரீட்சை ஆண்டு 3 முதல் – ஆண்டு 12 வரையான மாணவர்களுக்கு இடம்பெறும்

எமது கல்வி நிலையம் உட்பட பல தமிழ்ப் பாடசாலைகள்  இதில் பங்கேற்க உள்ளன. எமது கல்வி நிலைய  மாணவர்கள் அனைவரும், இந்த பரீட்சையில் பங்கேற்கும் வாய்ப்பு, நிர்வாகத்தினரால்  ஒழுங்கு செய்யப்படும். 

The New South Wales Federation of Tamil Schools (NSWFTS) is pleased to announce that the Dr. Ilango Venthanar Memorial Tamil Language Proficiency Examinations for 2025 will be held on Saturday, 23rd August 2025 (New Date).This examination will be conducted for students from Year 3 through to Year 12.

Several Tamil schools, including WTSC , are set to participate. WTSC Administration will organise the enrolments for our students to have the opportunity to attempt this examination.

மேலும் விவரங்களுக்கும் கடந்த கால வினாத்தாள்களுக்கும் | For further details and past papers: WTSC இளங்கோ வேந்தனார் பரீட்சை பக்கம்


WTSC | Class-Structure-2025


நிர்வாகக் குழு | Administration

வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் | Wentworthville Tamil Study Centre.


END