தவணை 3 வாரம் 4 – அறிவித்தல்கள்
1. வகுப்புகளுக்கான நேரம், இடம் / Classes Time and Location
வகுப்புக்களுக்கான நேர அட்டவணை கீழே காட்டப்பட்டுள்ளது: Class Timetable is as follows:
நியூ சவுத் வேல்ஸ் தமிழ்ப்பாடசாலைகள் கூட்டமைப்பு நடாத்தும் கலாநிதி வேந்தனார் இளங்கோ ஞாபகார்த்தப் புலமைப் பரிசிற் பரீட்சை, ஆண்டு 3 தொடக்கம் ஆண்டு 10 வரையான வகுப்பு மாணவர்களுக்கு இந்த வாரம் (17.08.2024) நடைபெறும்; Dr ILANGO VENTHANAAR’s Memorial Tamil Language Proficiency Examinations by New South Wales Federation of Tamil Schools (NSWFTS) will be conducted this week (17.08.2024) for Year 3 to Year 10 Students.
எதிர் வரும் வருடாந்த கலைவிழாவை முன்னிட்டு கலைவிழா 2024 மலருக்கான மாணவர்களுடைய ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. கீழ் வகுப்பு மாணவர்களுடைய ஆக்கங்கள் அரைப் பக்கத்திலும் மேல் வகுப்பு மாணவர்களுடைய ஆக்கங்கள் முழுப் பக்கத்திலும் உள்ளடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கலைவிழா மலருக்கான ஆக்கங்கள் சம்பந்தமான சில குறிப்புகள்:-
1. மாணவர்கள் தங்களுடைய ஆக்கங்களை 31.08.2024க்கு முன்னதாக, அதிபர்களிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. தாமதமாக வரும் ஆக்கங்கள் பிரசுரிக்கப்படமாட்டாது.
3. ஆக்கங்கள் பல வண்ண நிறத்தில் இருப்பது நல்லது.
4. தெளிவான ஆக்கங்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும்.
5. மாணவர்கள் தங்கள் பெயரையும் வகுப்பையும் உள்ளடக்கவும்.
6. மாணவர்கள் படத்தை மட்டும் வரையாது அதைப் பற்றி தமிழில் ஒரு சொல்லேனும் எழுத தூண்டுதல் விரும்பத்தக்கது. ஆக்கங்களை தயாரிப்பதற்கான படிவத்தை கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பெற்றுக் கொள்ளலாம். We request students to prepare their creative pictures and articles to publish in our Annual Kalai Vizha Magazine. Lower school students are eligible to use half page and upper school students are eligible to use full page as attached in the below link. Please note the below points; 1. Creative pictures and articles needs to submitted before 31.08.2024 to the Principals. 2. Late submission will not be published in the magazine. 3. Pictures can be colorful. 4. Clear submissions only will be published in the magazine. 5. Students are requested to include their name and class. 6. If possible, students may includes few words about their pictures.
கடந்த புகைப்பட நாளன்று (10.08.2024) உதவி புரிந்த அனைத்துத் தொண்டர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். Thanks for the Volunteers, Teachers, Parents, Carers, and Students who has helped us for the successful photo day on 10.08.2024.
வருடாந்த கலைவிழா 21.09.2024 அன்று போமன் மண்டபத்தில் நடைபெறும். இது சம்பந்தமான மேலதிக தகவல்கள் மிகவிரைவில் வழங்கப்படும். கலைவிழாவுக்கான மேலதிக பயிற்சிகள் அந்தந்த வகுப்பு ஆசிரியர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுவருகிறது. இது சம்பந்தமாக வகுப்பு ஆசிரியர்கள் மேலதிக தகவல்களை வழங்குவார்கள். Annual ‘Kalai Vizha” concert has been scheduled on 21.09.2024 at Bowman Hall, Blacktown. We will update further details in due course. Additional practices are arranged by the class Teachers. Class Teachers will provide more details regarding the additional practices timing and location.
கிரவீன் பாடசாலையின் (GPS) கட்டுமானப் பணிகள் சம்பந்தமான தகவல் தினம் ஒன்று 27.08.2024 அன்று GPS இனால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான மேலதிக தகவல்களை இந்த அறிக்கையில் பார்வையிடலாம். Girraween Public School project update will be conducted on 27.08.2024 at GPS. Please see the flyer for more details.
2. சுகவீனாமான மாணவர்கள் / Students with Sickness
உங்களுடைய பிள்ளைகள் சுகவீனாமாக இருந்தால் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். சுகவீனத்துடன் வரும் மாணவர்களை இனங்காணுமிடத்து, அவர்களுக்கு முகக் கவசம் வழங்கப்படும். மருத்துவக் காரணங்களுக்காக உங்கள் குழந்தைகள் முகக் கவசம் பாவிக்க முடியாதிருந்தால், முன் கூட்டியே எமக்கு அறியத்தரவும்.
If your child is sick, please do not send them to the school. If we find a child with sickness, we will provide a surgical face mask. If your child can not wear face mask due to medical reasons, please let us know in advance.
3. மாணவர் ஒன்றுகூடல் / Assembly
மாணவர் ஒன்று கூடல் பி. ப. 3.00 தொடக்கம் பி. ப. 3.15 வரை இரண்டு வளாகங்களிலும் நாட்காட்டியில் காட்டிய நாட்களில் மாத்திரம் நடைபெறும். கீழே உள்ள இணைப்பை அழுத்தி பாடசாலை நாட்காட்டியைப் பார்க்கவும்.
The assembly will be held at both Campuses from 3.00pm to 3.15pm as per the school calendar. Please click the below link for the School Calendar.
4. புதிய மாணவர்களை பதிவு செய்தல் / Enrolment of New Students
நடப்பு வருடத்தின் ஆடி 31ம் திகதி அன்று (July 31st) மூன்றரை அல்லது அதற்கும் கூடிய வயதை எய்தும் சிறார்களை வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையத்தில் சேர்த்துக்கொள்ளலாம். இரண்டு பாடசாலைகளிலும் மாணவர்களைப் பதிவு செய்யலாம்.
Children over three and half year old as of 31st July 2024 are eligible to enroll in the Tamil School. Enrolments will be taking place at both schools.
Girraween Public School (GPS) 9 Bando Rd, Girraween NSW 2145 Entry via Bando Road (GATE 4)
Metella Road Public School (MRPS) 117-131 Metella Rd, Toongabbie, NSW 2146 Entry via Metella Road only
The enrollment process is as follows: Step 1: Visit the WTSC website or click the enrolment link below; Website Link: https://wtsc.ueducateus.com.au/enrolment
Note: Please complete the online enrolment form before visiting the schools. Ensure you have filled all the fields to avoid delay in enrolment.
Step 2: Visit a school in person to complete other processes. Payment Methods:
Note: Students in Year 6 and above (in the mainstream) will be assessed with a simple exam. This exam takes only 15 minutes to understand the students’ competency in the Tamil language in order to be assigned to an appropriate class.
Step 3: New students are directed to their appropriate classrooms.
5. பாடசாலை வசதிக் கட்டணம் / School Facilities Fee
பெற்றோர்கள், மாணவர்களுக்கான பாடசாலை வசதிக் கட்டணத்தைச் செலுத்தி, பாடசாலை நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
We request parents to pay the school facilities fees to smoothly run the school’s day-to-day activities.
6. விசேட தேவைகள் / Special Needs
உங்கள் மாணவர்களுக்கு எதாவது விசேட தேவைகள் இருப்பின் அறியத்தரவும்.
Please inform us, if your child has special needs.
7. தொண்டர்கள் / Volunteers
இப் பாடசாலை தன்னார்வத் தொண்டர்களால் நடாத்தப்படுகிறது. பெற்றோர்களைத் தாமாக முன்வந்து, தொண்டர்களாக இணைந்து, பாடசாலை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
This school is run by volunteers. We request parents to become as volunteers and engage in school activities.
SCAN ME TO JOIN AS VOLUNTEER
8. வளாக நடைமுறைகள் / Operations and Regulations:
GPS வளாக நடைமுறைகள்:
- வகுப்புகளுக்குள் நுழைதல்: ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சென்ற பின்னரே மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்லவேண்டும்.
- பாடசாலைப் பாவனை: GPS பாடசாலை வளாகத்தில், கட்டட வேலைகள் ஆரம்பத்திருப்பதால், அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் கவனமாக நடமாடவும், தேவை ஏற்படும்போது தொண்டர்களை அணுகவும்.
- வாகன நிறுத்தம்: NSW மாநில வீதிப் போக்குவரத்து விதிகள் மற்றும் வீதி ஒழுங்குகளைப் பின்பற்றவும். அயலவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை நிறுத்தவும்.
- உணவு மற்றும் பானம்: வகுப்பறைக்குள் உணவும் பானமும் கொண்டு வருதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
GPS operations and regulations:
- Classroom Entry: Students should not enter in to the class room without teacher’s presence.
- School premises usage: Please use the premises cautiously as GPS has started building construction.
- Parking: Please ensure that you obey NSW street parking rules and exercise common courtesy when parking your car on the street. Ensure you are not causing inconvenience to the neighbors.
- Food and Drink: No food or drink allowed inside the Classrooms.
MRPS வளாக நடைமுறைகள்:
- வகுப்புகளுக்குள் நுழைதல்: ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் சென்ற பின்னரே மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்லவேண்டும்.
- பாடசாலைப் பாவனை: MRPS பாடசாலை வளாகத்தில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மாத்திரம் நடமாடவும். தேவை ஏற்படும்போது தொண்டர்களை அணுகவும்.
- வாகன நிறுத்தம்: NSW மாநில வீதிப் போக்குவரத்து விதிகள் மற்றும் வீதி ஒழுங்குகளைப் பின்பற்றவும். அயலவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை நிறுத்தவும்.
- உணவு மற்றும் பானம்: வகுப்பறைக்குள் உணவும் பானமும் கொண்டு வருதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
MRPS operations and regulations:
- Classroom Entry: Students should not enter in to the class room without teacher’s presence.
- School premises usage: Parents may face certain restrictions when entering certain blocks inside the school. We kindly ask for your cooperation with our volunteers.
- Parking: Please ensure that you obey NSW street parking rules and exercise common courtesy when parking your car on the street. Ensure you are not causing inconvenience to the neighbors.
- Food and Drink: No food or drink allowed inside the Classrooms.
நிர்வாகக் குழு / Administration வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் Wentworthville Tamil Study Centre.