
அறிவித்தல்கள் Announcements
GPS Campus: Girraween Public School, 9 Bando Road, Girraween NSW 2145
MRPS Campus: Metella Road Public School, 117-131 Metella Road, Toongabbie NSW 2146
Date: 22-Feb-2025

இந்த வாரத்திலிருந்து பாடசாலை வழமை போல் இரு வளாகங்களிலும் இயங்கும்.
Normal school operations resume from this week at both campuses.

GPS Campus access instructions | பாடசாலை நுழைவாயில்:
From Term 1, only Gate 4 on Bando Road will be open, as access via Gilba Road will be closed due to construction and safety measures.
முதலாம் தவணையிலிருந்து Gate 4 on Bando Road, நுழைவாயில் மாத்திரம் திறக்கப்படும். Gilba Road வழியான நுழைவாயில் கட்டுமான மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கும்.

Student assemblies this week | இந்த வார மாணவர் ஒன்றுகூடல்
GPS Campus: Assembly
MRPS Campus: No Assembly this week
GPS வளாகம்: ஒன்றுகூடல் இடம்பெறும்
MRPS வளாகம்: இந்த வாரம் ஒன்றுகூடல் நடைபெறமாட்டாது

New Enrolments | புதிய மாணவர் அனுமதிகள்
Enrolments will be accepted at both campuses starting this week.
இந்த வாரத்திலிருந்து இரு வளாகங்களிலும் பதிவுகள் ஏற்கப்படும்.

Trophies and certificates | விருதுகள், பதக்கங்கள் சான்றிதழ்கள்
Trophies and certificates are available for collection from this week at MRPS Campus.
கடந்த வருடத்தில் விருதுகள், பதக்கங்கள் சான்றிதழ்களை பெறத் தவறியோருக்கு இந்த வாரத்திலிருந்து இவை மீள வழங்கப்படும்.
இடம்: MRPS வளாகம்

Parent Teacher Interview | பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு
Parent-teacher meetings have been scheduled for next week (01-03-2025). Booking notifications will be sent to lower school (Kinder to Year 3) and all special classes (Preparatory, Bridging, Navalar and Vipulananthar) via uEducateUs. Please watch and book as soon as possible to secure your 5-minute time slot. Note that bookings can be made only through uEducateUs mobile app or parent portal, therefore please ensure you have uEducateUs app installed and logged in.
வரும் வாரம் (01-03-2025), பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பப்பள்ளி முதல் ஆண்டு 3 மற்றும் அனைத்து சிறப்பு (புகுநிலை வகுப்பு, இணைப்பு வகுப்பு, நாவலர், விபுலானந்தர்) வகுப்புகளுக்கு முன்பதிவு செய்யும் விபரம் uEducateUs மூலம் அனுப்பப்படும். uEducateUs மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியுமாதலால், உங்களுடைய uEducateUs இனை பயன்பாட்டில் வைத்திருக்கவும்.

MRPS Campus Car Parking | MRPS வாகனத் தரிப்பிடம்
The front car park (via Metella Road) is reserved for teachers only, while the rear parking area (via Cornelia Road) is designated for volunteers and subcommittee/committee members only.
முன்புற வாகனத் தரிப்பிட பகுதி (Metella Road) ஆசிரியர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது, பின்பக்க வாகனத் தரிப்பிட பகுதி (Cornelia Road) தொண்டர்கள் மற்றும் உப குழு /செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Google Classroom | கூகுள் வகுப்பறை
Thanks to all students and parents who joined us through Google Classroom during week two due to GPS campus closure. This alternative operation was organised within a short time frame and has been a huge success. School achieved more than 75% participation, which is an excellent outcome.
வாரம் இரண்டில், GPS வளாகம் மூடப்பட்ட வேளையில், கூகுள் வகுப்பறை மூலம் இணைந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றிகள். குறுகிய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றுத்திட்டமானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 75% இற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியது சிறப்பானதாகும்.

Textbooks shortage | பாடப் புத்தகங்கள் பற்றாக்குறை
We apologise for the inconvenience caused by the lack of textbooks in a few classes during Week 1 and 2. Unfortunately, this was due to a delay in delivery from our vendor, the NSW Federation of Tamil Schools (NSWFTS). Please rest assured that WTSC submitted the book order on time. However, NSWFTS is experiencing printer issues leading to this unforeseen situation.
கடந்த வாரங்களில் ஒரு சில வகுப்புகளில் பாடப் புத்தகங்கள் இல்லாததால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். பாடப்புத்தகங்கள் பதிப்பித்து வழங்கும் நியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகள் கூட்டமைப்பு, பாடப்புத்தகங்களை உரிய காலத்தில் அச்சிடுவதில் ஏற்பட்ட சிக்கல் இதற்கு காரணமாகும். எமது பாடசாலை உரிய நேரத்தில், போன வருடமே எமக்குரிய கொள்வனவு பட்டியலை சமர்ப்பித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது

Stay Connected with Your Child’s School Information!
WTSC encourages parents to use the uEducateUs mobile app or online portal to stay updated on their child’s profile, class details, semester reports, Parent-teacher interview and attendance. Additionally, school facility fees can be conveniently paid through the uEducateUs app once you receive an invoice from WTSC.
We kindly ask parents to review and update their child’s details, including Name (both in English & Tamil) and Mainstream School Name & Year Level. This can be updated through the uEducateUs online portal.
📌 Click here for the Parent’s Guide on using uEducateUs Student Management System.
WTSC பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் சுயவிவரம், வகுப்பு விவரங்கள், தவணை அறிக்கைகள், பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு மற்றும் வருகைப்பதிவு ஆகியவற்றைப் புதுப்பித்துக்கொள்ள uEducateUs செயலி அல்லது இணையத்தளத்தினை பயன்படுத்த ஊக்குவிக்கிறது. நீங்கள் WTSC இலிருந்து வசதிக்கட்டணம் செலுத்துவதற்கான அறிவித்தல் பெற்றவுடன், uEducateUs பயன்பாட்டின் மூலம் வசதியாகச் செலுத்தலாம்.
மாணவருடைய பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும்) மற்றும் பிரதான பாடசாலையின் பெயர் & ஆண்டு நிலை உட்பட உங்கள் பிள்ளைகளின் விவரங்களை மீளாய்வு செய்து புதுப்பிக்கும்படி பெற்றோரை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இதை uEducateUs இணையத்தளமூடாக (Online portal) சரிபார்த்துக்கொள்ளலாம்
📌 uEducateUs பெற்றோர்கள் கையேடு
Classroom Schedule | வகுப்பறை விபரங்கள்


எமது மாணவர்களுக்குப் பயனுள்ள தகவல்கள் / Useful Information for our Students
சிலப்பதிகாரம் – பாரம்பரிய தமிழ் நாடகம்
எமது சகோதர பாடசாலையான , விக்டோரியா மாநில , பாரதி பள்ளியினரின் மாணவர்கள் நடிக்கும், புகழ் பெற்ற நாடக ஆசிரியரும் , தமிழாசிரியருமான, மாவை நித்தியானந்தன் அவர்களின் தயாரிப்பில் உருவாகிய சிலப்பதிகாரம் என்கிற பாரம்பரிய தமிழ் நாடகம், வரும் 9ந் திகதி மார்ச் மாதம் (ஞாயிற்றுக்கிழமை) Penrith John Sutherland Performing Arts Centre இல் இடம்பெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணைப்பினை அழுத்தவும்.
https://www.thejoan.com.au/events/silapathikaram-mahajana-maalai
Silapathikaram – The Epic Unfolds in Sydney
After three sessions SOLD OUT in Melbourne this spellbinding theatrical masterpiece brought to Sydney by popular demand.
An 1,800 year old Tamil epic, reimagined for the modern stage written by Mavai Nithi & directed by Bakeerathy Parthiban, this show brings history to life with an extraordinary fusion of drama, music and dance.
AUDIENCE INFORMATION
First Half: 120 minutes
Second Half: 90 minutes
நிர்வாகக் குழு | Administration
வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் | Wentworthville Tamil Study Centre.
END