Term 2 Week 4 – Announcements

Date: 24-May-2025

GPS Campus: Girraween Public School, 9 Bando Road, Girraween NSW 2145
MRPS Campus: Metella Road Public School, 117-131 Metella Road, Toongabbie NSW 2146


GPS | MRPS Campus:

Assembly will be held this week.

GPS | MRPS வளாகம்: 

இந்த வாரம்  மாணவர் ஒன்றுகூடல் இடம்பெறும்.


Principal Awards | அதிபர் விருதுகள்

Students in Year 1 and 3 who had their Teacher Awards submitted in Term 1 2025 will be presented with their Principal Awards this week (24-May-2025), at MRPS.

Students from Year 2 will be presented with their Principal Awards the week after on 31-May-2025.

Please note that students receiving awards have been notified through uEducateUs.

இந்த வாரம் (24-May-2025) MRPS வளாகத்தில், தவணை ஒன்றில் அதிபர் விருதுக்கான ஆசிரியர் விருதுகள் சமர்ப்பித்த ஆண்டு 1 மற்றும் 3 மாணவர்களுக்கு அதிபர் விருதுகள் வழங்கப்படும். 

அடுத்த வாரம் (31/5/2025) ஆண்டு 2 மாணவர்களுக்கு வழங்கப்படும். 

இந்த விருதுப்  பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு uEducateUs செயலி மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.


MRPS Class Room Changes | MRPS வளாக வகுப்பறை மாற்றங்கள்

Classroom locations have been changed due to limited space availability and the ongoing Speech and Verbal competition this week.

Please kindly check the classroom location schedule before arriving at school to ensure students are ushered to the correct class locations.

பேச்சுப்போட்டிகள் இடம்பெறுவதாலும், இட வசதி காரணமாகவும் , போன வாரத்திலிருந்து MRPS வகுப்பறைகள் சில மாற்றப்பட்டுள்ளது.

தயவு செய்து வகுப்பறை அட்டவணையினை கவனமாக பார்த்து உங்கள் பிள்ளைகளை சரியான வகுப்புகளில் விடவும்.


Late arrival discipline | மாணவர் வருகை நேர ஒழுங்கு

Safety of our children is the responsibility of all. Parents dropping off their children later than school start time are required to register the late arrival of your child using the uEducateUs KIOSK.

Parents are kindly requested to accompany your child into school grounds, and present yourself at the uEducateUs KIOSK Desk to register the Student Drop off.

Scroll down to the ‘Kiosk (Self Serve) – Early and Late Notes’ section for further information on this.

மாணவர்களின்  பாதுகாப்பு எங்கள் அனைவரதும் பொறுப்பாகும், இதன் காரணமாக பாடசாலை ஆரம்பமாகும் நேரத்திற்கு தாமதமாக வரும் மாணவர்களுக்கான அனுமதிக்குறிப்புகள் (Late Arrival Notes) பாடசாலை அலுவலத்தில் பெற்றோரினால், uEducateUs KIOSK மூலம் பதியப்பட வேண்டி இருப்பதனால், தாமதமாக பாடசாலைக்கு உள் நுழையும்   மாணவர்களுடன் பெற்றோரும் பாடசாலை வளாகத்திற்கு உள்ளே வருகை தர வேண்டுமென்பதை  பணிவாக அறியத்தருகின்றோம்.

முன்கூட்டி வெளியேறுவதற்கான (Early notes) அனுமதி சம்பந்தமான மேலதிக விபரங்கள், Kiosk (Self Serve) – Early and Late Notes எனும் பகுதியில் கீழே தரப்பட்டுள்ளது.


இந்த வாரமும் பேச்சு மற்றும் வாய்மொழித் தொடர்பாடல் போட்டிகள் தொடர்கின்றன. 

குறிப்பு: தயவுசெய்து பேச்சுப் போட்டிக்கான நேர அட்டவணையை கவனமாக பார்க்கவும். நேர அட்டவணையைப் பின்பற்றுங்கள், பேச்சு மற்றும் வாய்மொழித் தொடர்பாடல் போட்டி முடிந்ததும் உங்கள் பிள்ளைகளை (மாணவர்களை)  வீட்டிற்கு அழைத்துச் செல்லவும். அன்றைக்கு வகுப்புகள் இடம்பெற மாட்டாது.

Competitions this week | இந்த வார போட்டிகள் (24-May-2025)

Metella Road Public School (MRPS)

01:30 PM Year 2 | ஆண்டு 2

Girraween Public School (GPS)

01:30 PM Year 7 | ஆண்டு 7

Toongabbie Community Centre (TCC)

01:30 PM Year 5 | ஆண்டு 5

பேச்சுப் போட்டிக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. அத்துடன் பேச்சுப் போட்டிக்கான பின்வரும் விடயங்களை கீழே உள்ள இணைப்பை அழுத்தி எமது இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்;

  1. பேச்சும் வாய்மொழித் தொடர்பாடலும் போட்டி விதிமுறைகளும் வழிகாட்டல்களும்
  2. பேச்சுப் போட்டிக்கான விடயம் (Script)
  3. வாய்மொழித் தொடர்பாடலுக்கான மாதிரி வினாக்கள்
  4. மாதிரி குரல்வழிப் பதிப்பு(Youtube)

Speech and verbal competitions continue this week. Refer to the speech and verbal competition timetable shown below. Please use the link provided below to download the following speech competition-related documents,

NOTE: Please remeber to check the time and venue for your children’s classes. Follow the scheduled timetable and ensure that kids go home when the speech and verbal competitions end for your child at the venue.

  1. Speech and verbal competition rules and guidelines10-05-2025 (வாரம் 2) முதல் 
  2. Speech script
  3. Sample questions for verbal competition
  4. Sample Speech Audio Version (Youtube)

Timetable | நேர அட்டவணை 2025

மாதிரி குரல்வழிப் பதிப்பு | Sample Speech Audio (Youtube)

2025ம் ஆண்டுக்கான பேச்சுப் போட்டியில், உங்கள் பிள்ளைகளது பயிற்சிக்கு உதவுவதற்காக, வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையமானது பேச்சுகளின் மாதிரி குரல்வழிப் பதிப்புகளை (voice-over versions) தயாரித்துள்ளது. இப்பேச்சுகள் எங்கள் ஆசிரியர்களின் குரல்களில் இடம் பெறுவதால், அவை மாணவர்களுக்கு மேலும் ஈர்க்கக்கூடியதாகவும், எளிதாக விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என நம்புகிறோம்.

தயவுசெய்து கவனிக்கவும்: இவை மாதிரிப் பேச்சுகள் மட்டுமே. மாணவர்கள் தங்களுக்கே உரித்தான தனித்துவமான முறையில் பேச்சுகளை வழங்குவதையே விரும்புகின்றோம்.

WTSC has produced audio version of the 2025 speeches for students to use as examples to help them prepare for the 2025 speech competitions. These recordings feature the voices of teachers, which makes them more engaging and easier for students to connect with. 

Please note that these are sample speeches only. We encourage students to deliver their speeches in their own unique style.

WTSC Sample Speech Audios (YouTube)


Student Facility Fees:  We hope everyone has received emails regarding their student facility fees. This year, you can pay your fees using your credit card from the comfort of your home through the uEducateUs platform.We request parents to help support school activities by paying the school facility fees for their students.


WTSC library service is accessible at both campuses. You can borrow books from the books list available at GPS and MRPS campuses. 

WTSC நூலகம்  தனது சேவையை MRPS மற்றும் GPS வளாகங்களில் வழங்குகிறது. இணைய சேவையில் சில திருத்த வேலைகள் இடம் பெறுவதால் பாடசாலையில் நேரடியாக வந்து புத்தகங்களை சேகரிக்கவும்.

WTSC Library Operating Hours:

GPS Campus:

2:30 PM-3:30 PM

4:00 PM-5:00 PM


MRPS Campus:

GPS Campus:


Self-service kiosks are available on iPads for managing both Early and Late Notes. Parents can conveniently self-serve these tasks using their unique uEducateUs KIOSK Codes. All parents are expected  to utilise these kiosks for submitting Early and Late Notes.

KIOSK Codes can be located by viewing your uEducateUs Parent Profile information.

பெற்றோர்  தங்கள் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து முன்கூட்டி வெளியேறுவதற்கான அல்லது தாமதமாக  வருகை தந்தமைக்கான  அனுமதிக் குறிப்புகளை KIOSK iPad மூலமாக தாமாகவே பெற்றுக்கொள்ளலாம். இதற்கு தேவையான உங்கள் தனிப்பட்ட KIOSK இலக்கத்தை இலக்கத்தை தங்கள் uEducateUs App ஐ பயன்படுத்தி, பெற்றோர் விபரத்தை (Profile) பார்வையிடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.


முழு விபரத்திற்கு | For further details


Volunteers Required !!! தொண்டர்கள் தேவை  !!!!

The WTSC Team is looking for dedicated volunteers to manage Saturday operations. As our school and classes continue to grow, and with stricter public school requirements in place, keeping everything in order is becoming more challenging each week.

Your support would be invaluable in ensuring smooth and successful operations. If you’re interested, please click the link below to express your interest. If you have already completed the form, our team members will be in touch in the coming days.

Link to form


No Food or Drink in Classroom

We kindly remind everyone about the proper use of school premises. Please do not bring food or drinks inside the classrooms and ensure that used cups, food wrappers, and any other waste are disposed of in the nearest bins provided. Your cooperation is greatly appreciated in keeping the school clean and tidy.

தயவுசெய்து வகுப்பறைகளுக்குள் உணவு அல்லது பானங்களை எடுத்து செல்ல  வேண்டாம். பயன்படுத்திய  பானக் குவளைகள் உணவு உறைகள்  மற்றும் பிற குப்பைகளை அருகிலுள்ள குப்பைத் தொட்டிகளில் போடுவதை உறுதி செய்யுங்கள்.



எமது மாணவர்களுக்கு  பயனுள்ள தகவல்கள் | Useful Information for our Students

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் “வெல்லும் சொல்

  1. போட்டி நடைபெறும் நாட்கள்:
    • ஆரம்ப சுற்றுகள் இணையவழி மூலமாக (Zoom) மட்டுமே நடைபெறும்- ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 13 ஆம் திகதி (Sunday 13th July 2025).
    •  இறுதிச்சுற்றுகள் நேர்முகமாகவும் (face-to-face), மாநிலம் கடந்து வாழும் போட்டியாளர்களுக்கு மட்டுமே இணையவழி மூலமாகவும் நடைபெறும் – ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 20 ஆம் திகதி (Sunday 20th July 2025).  

2. விண்ணப்ப முடிவு திகதி: சனிக்கிழமை, ஜூலை 5 ஆம் திகதி (Saturday 5th July 2025).

விண்ணப்பப் படிவத்தை நிரப்ப பின்வரும் இணைப்பைப் பாருங்கள்:  https://forms.gle/Bs8KzFKbjq6HcAN19

விபரங்கள், ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டாயமாகப் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.

3. தகவல் பட்டறை (Information Session): 

இவ்வருட வெல்லும் சொல் போட்டியைப் பற்றிய விபரங்களை உங்களுக்கு அறியத் தருவதற்கு Zoom மூலமாக ஒரு தகவல் பட்டறை (Information Session), ஜூலை 06 ஆம் திகதி மாலை 7 முதல் 8 மணி வரை (7 PM to 8 PM on Sun 6th July) நடைபெறவுள்ளது. தவறாது இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

மேலதிக தகவல்களுக்கு:

அகலவன்: 0470 345 644


நிர்வாகக் குழு | Administration

வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் | Wentworthville Tamil Study Centre.


END