
அறிவித்தல்கள் Announcements
Date: 31-May-2025
GPS Campus: Girraween Public School, 9 Bando Road, Girraween NSW 2145
MRPS Campus: Metella Road Public School, 117-131 Metella Road, Toongabbie NSW 2146
IMPORTANT INFORMATION | முக்கிய அறிவித்தல்
- GPS Campus is closed this week due to maintenance however alternative arrangements are disclosed in the below table.
- All the Speech competitions scheduled at Week 5 (31st May 2025) will be held at MRPS Campus.
- GPS வளாகம் இந்த வாரம் முழுமையாக மூடப்பட்டிருக்கும், மாற்று ஏற்பாடுகள் குறித்து கீழ்க்காணும் அட்டவணையினை பார்க்கவும்.
- வாரம் 5, (31 மே 2025) இல் இடம்பெறும் அனைத்து பேச்சுப்போட்டிகளும் MRPS வளாகத்தில் மாத்திரம் இடம்பெறும்
Alternative arrangements / மாற்று ஏற்பாடுகள்

Principal Awards | அதிபர் விருதுகள்
Students in Year 2 who had their Teacher Awards submitted in Term 1 2025 will be presented with their Principal Awards this week (31-May-2025), at MRPS. Please note that students receiving awards have been notified through uEducateUs.
இந்த வாரம் (31/5/2025 ) ஆண்டு இரண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதுப் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு uEducateUs செயலி மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Late arrival discipline | மாணவர் வருகை நேர ஒழுங்கு
Safety of our children is the responsibility of all. Parents dropping off their children later than school start time are required to register the late arrival of your child using the uEducateUs KIOSK.
Parents are kindly requested to accompany your child into school grounds, and present yourself at the uEducateUs KIOSK Desk to register the Student Drop off.
Scroll down to the ‘Kiosk (Self Serve) – Early and Late Notes’ section for further information on this.
மாணவர்களின் பாதுகாப்பு எங்கள் அனைவரதும் பொறுப்பாகும், இதன் காரணமாக பாடசாலை ஆரம்பமாகும் நேரத்திற்கு தாமதமாக வரும் மாணவர்களுக்கான அனுமதிக்குறிப்புகள் (Late Arrival Notes) பாடசாலை அலுவலத்தில் பெற்றோரினால், uEducateUs KIOSK மூலம் பதியப்பட வேண்டி இருப்பதனால், தாமதமாக பாடசாலைக்கு உள் நுழையும் மாணவர்களுடன் பெற்றோரும் பாடசாலை வளாகத்திற்கு உள்ளே வருகை தர வேண்டுமென்பதை பணிவாக அறியத்தருகின்றோம்.
முன்கூட்டி வெளியேறுவதற்கான (Early notes) அனுமதி சம்பந்தமான மேலதிக விபரங்கள், Kiosk (Self Serve) – Early and Late Notes எனும் பகுதியில் கீழே தரப்பட்டுள்ளது.
WTSC Speech and Verbal Competition | பேச்சு மற்றும் வாய்மொழித் தொடர்பாடல் போட்டி 2025
இந்த வாரமும் பேச்சு மற்றும் வாய்மொழித் தொடர்பாடல் போட்டிகள் தொடர்கின்றன.
குறிப்பு: தயவுசெய்து பேச்சுப் போட்டிக்கான நேர அட்டவணையை கவனமாக பார்க்கவும். நேர அட்டவணையைப் பின்பற்றுங்கள், பேச்சு மற்றும் வாய்மொழித் தொடர்பாடல் போட்டி முடிந்ததும் உங்கள் பிள்ளைகளை (மாணவர்களை) வீட்டிற்கு அழைத்துச் செல்லவும். அன்றைக்கு வகுப்புகள் இடம்பெற மாட்டாது.
Competitions this week | இந்த வார போட்டிகள் (31-May-2025)
Metella Road Public School (MRPS)
01:30 PM Year 3 | ஆண்டு 3
01:30 PM Year 4 | ஆண்டு 4
01:30 PM Year 6 | ஆண்டு 6
பேச்சுப் போட்டிக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. அத்துடன் பேச்சுப் போட்டிக்கான பின்வரும் விடயங்களை கீழே உள்ள இணைப்பை அழுத்தி எமது இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்;
- பேச்சும் வாய்மொழித் தொடர்பாடலும் போட்டி விதிமுறைகளும் வழிகாட்டல்களும்
- பேச்சுப் போட்டிக்கான விடயம் (Script)
- வாய்மொழித் தொடர்பாடலுக்கான மாதிரி வினாக்கள்
- மாதிரி குரல்வழிப் பதிப்பு(Youtube)
Speech and verbal competitions continue this week. Refer to the speech and verbal competition timetable shown below. Please use the link provided below to download the following speech competition-related documents,
NOTE: Please remeber to check the time and venue for your children’s classes. Follow the scheduled timetable and ensure that kids go home when the speech and verbal competitions end for your child at the venue.
- Speech and verbal competition rules and guidelines10-05-2025 (வாரம் 2) முதல்
- Speech script
- Sample questions for verbal competition
- Sample Speech Audio Version (Youtube)
Timetable | நேர அட்டவணை 2025
மாதிரி குரல்வழிப் பதிப்பு | Sample Speech Audio (Youtube)
2025ம் ஆண்டுக்கான பேச்சுப் போட்டியில், உங்கள் பிள்ளைகளது பயிற்சிக்கு உதவுவதற்காக, வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையமானது பேச்சுகளின் மாதிரி குரல்வழிப் பதிப்புகளை (voice-over versions) தயாரித்துள்ளது. இப்பேச்சுகள் எங்கள் ஆசிரியர்களின் குரல்களில் இடம் பெறுவதால், அவை மாணவர்களுக்கு மேலும் ஈர்க்கக்கூடியதாகவும், எளிதாக விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என நம்புகிறோம்.
தயவுசெய்து கவனிக்கவும்: இவை மாதிரிப் பேச்சுகள் மட்டுமே. மாணவர்கள் தங்களுக்கே உரித்தான தனித்துவமான முறையில் பேச்சுகளை வழங்குவதையே விரும்புகின்றோம்.
WTSC has produced audio version of the 2025 speeches for students to use as examples to help them prepare for the 2025 speech competitions. These recordings feature the voices of teachers, which makes them more engaging and easier for students to connect with.
Please note that these are sample speeches only. We encourage students to deliver their speeches in their own unique style.
WTSC Sample Speech Audios (YouTube)

மாணவர் வசதிக் கட்டணங்கள் சம்பந்தமான மின்னஞ்சல்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறோம். இந்த வருடம் நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்களுடைய கடன் அட்டையை பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தும் வசதி uEducateUs தளத்தினூடாக ஏற்படுபட்டுள்ளது. பெற்றோர்கள், மாணவர்களுக்கான பாடசாலை வசதிக் கட்டணங்களைச் செலுத்தி, பாடசாலை நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Student Facility Fees: We hope everyone has received emails regarding their student facility fees. This year, you can pay your fees using your credit card from the comfort of your home through the uEducateUs platform.We request parents to help support school activities by paying the school facility fees for their students.
WTSC Library | WTSC நூலகம்
WTSC library service is accessible at both campuses. You can borrow books from the books list available at GPS and MRPS campuses.
WTSC நூலகம் தனது சேவையை MRPS மற்றும் GPS வளாகங்களில் வழங்குகிறது. இணைய சேவையில் சில திருத்த வேலைகள் இடம் பெறுவதால் பாடசாலையில் நேரடியாக வந்து புத்தகங்களை சேகரிக்கவும்.
WTSC Library Operating Hours:
MRPS Campus:
GPS Campus: (CLOSED)
2:30 PM-3:30 PM
4:00 PM-5:00 PM

Office Hours | அலுவலக நேரங்கள்
MRPS Campus:
Kiosk (Self-Serve) | 02:00 PM-4:30 PM
Staffed Desk | 02:30 PM- 4:00 PM
GPS Campus: (CLOSED)
Kiosk (Self-Serve) | 01:30 PM-5:30 PM
Staffed Desk | 02:30 PM- 4:00 PM

Kiosk (Self Serve) – Early Depature and Late Arrival Notes
Self-service kiosks are available on iPads for managing both Early and Late Notes. Parents can conveniently self-serve these tasks using their unique uEducateUs KIOSK Codes. All parents are expected to utilise these kiosks for submitting Early and Late Notes.
KIOSK Codes can be located by viewing your uEducateUs Parent Profile information.
Early notes can only be obtained after student attendance has been marked. Please allow 30 minutes after the start of the class / school.
பெற்றோர் தங்கள் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து முன்கூட்டி வெளியேறுவதற்கான அல்லது தாமதமாக வருகை தந்தமைக்கான அனுமதிக் குறிப்புகளை KIOSK iPad மூலமாக தாமாகவே பெற்றுக்கொள்ளலாம். இதற்கு தேவையான உங்கள் தனிப்பட்ட KIOSK இலக்கத்தை இலக்கத்தை தங்கள் uEducateUs App ஐ பயன்படுத்தி, பெற்றோர் விபரத்தை (Profile) பார்வையிடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
வகுப்பு தொடங்கிய 30 நிமிடங்களுக்கு பிறகு தான் முன்கூட்டி செல்லும் அனுமதிக் குறிப்புகளை பெற முடியும். முதல் முப்பது நிமிடங்களுக்குள் வருகைப் பதிவினை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய மாணவர் அனுமதி: இடபற்றாக்குறை காரணமாக எமது பாடசாலை புதிய அனுமதிகளை இடைநிறுத்தி வைத்துள்ளது. முழுமையான விபரத்திற்கும், விதிவிலக்குகளுக்கும் பின்வரும் இணைப்பினை அழுத்தவும்.
New Student admissions: Due to space constraints, our school has suspended new admissions. For full details and exceptions , please click on the following link.
https://www.wtsc.org.au/student-enrolments-term-2-and-3-2025/

Volunteers Required !!! தொண்டர்கள் தேவை !!!!
The WTSC Team is looking for dedicated volunteers to manage Saturday operations. As our school and classes continue to grow, and with stricter public school requirements in place, keeping everything in order is becoming more challenging each week.
Your support would be invaluable in ensuring smooth and successful operations. If you’re interested, please click the link below to express your interest. If you have already completed the form, our team members will be in touch in the coming days.

No Food or Drink in Classroom
We kindly remind everyone about the proper use of school premises. Please do not bring food or drinks inside the classrooms and ensure that used cups, food wrappers, and any other waste are disposed of in the nearest bins provided. Your cooperation is greatly appreciated in keeping the school clean and tidy.
தயவுசெய்து வகுப்பறைகளுக்குள் உணவு அல்லது பானங்களை எடுத்து செல்ல வேண்டாம். பயன்படுத்திய பானக் குவளைகள் உணவு உறைகள் மற்றும் பிற குப்பைகளை அருகிலுள்ள குப்பைத் தொட்டிகளில் போடுவதை உறுதி செய்யுங்கள்.
Classroom Schedule | வகுப்பறை விபரங்கள்
எமது மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் | Useful Information for our Students
வெல்லும் சொல் திறனாளர் தேர்வுப் பேச்சுப் போட்டி 2025 – அவுஸ்திரேலியக் கம்பன் கழகம்
Official Invitation: https://drive.google.com/file/d/1hElj7wR-gYMznb2C2DhN3YiEuPpvY2c7/view?usp=sharing
Competition Information, Rules and Guidelines: https://drive.google.com/file/d/1eETW5mEhJqmVil8RisjYMoOl-tx6W_Wl/view?usp=sharing
3rd Speaker Topics: https://drive.google.com/file/d/1lcsgQBIAdvRcXPWY6r5msLMpALmuDBcV/view?usp=sharing
மேலதிக விபரங்களுக்கு: அகலவன் – ஒருங்கிணைப்பாளர் | 0470 345 644
தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2025
போட்டி விவரங்கள், தகவல் தொகுப்பு, ஒவ்வொரு பிரிவுக்கான தகவல், கடந்த கால பரீட்சைத் தாள்கள் மற்றும் மாதிரி வாய்மொழித் தொடர்பாடல் மற்றும் வினாடி வினா போட்டி கேள்விகள் உள்ளிட்டவை எங்கள் இணையதளம் https://www.tamilcompetition.org.au/information-pack இல் உள்ளன.
முக்கியமான தேதிகள்:
- இளைஞர் பிரிவுக்கான எழுத்தறிவுப் போட்டி: 22/06/2025 (விண்ணப்ப முடிவு 15/06/2025)
- சிட்னியில் எனைய போட்டிகள்: 03, 10, 17 & 24 ஆவணி 2025 (விண்ணப்ப முடிவு 21/07/2025)
- மெல்பேர்னில் தேசிய போட்டிகள்: 04/10/2025
- மெல்பேர்னில் பரிசளிப்பு – தேசிய போட்டிகள்: 05/10/2025
- பரிசளிப்பு – மாநில போட்டிகள்: 19/10/2025
மேலதிக விபரங்களுக்கு: பகீரதன் – ஒருங்கிணைப்பாளர் | 0401 354 030
நிர்வாகக் குழு | Administration
வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம் | Wentworthville Tamil Study Centre.
END